5 வயது சிறுமி முதல் 60 வயது கிழவி வரை.. மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள்.. ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைக்கும் சம்பவம்..!

By Nanthini on ஆடி 7, 2025

Spread the love

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தில் முன்பு துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய ஒரு தலித் நபர் 1998 முதல் 2014 வரை தர்மஸ்தலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோரின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீஸிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை அழைத்துள்ளார். தன்னுடைய அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை அவர் வெளிப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார் அளித்தவர் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது புகாருடன் சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களின் புகைப்படங்களையும் காவல்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும் அந்தப் புகாரில் நான் புதைத்த உடல்களின் எச்சங்களை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சுமார் 11 வருடங்களுக்கு முன்பு நான் எனது குடும்பத்துடன் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்தோம். நாங்களும் கொல்லப்படுவோம் என்ற பயம் தினமும் எங்களை வாட்டி வதைக்கிறது.

   

நான் ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தலா கோவிலில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினேன். ஆரம்பத்தில் நான் பல உடல்களை பார்த்தேன். அவர்கள் தற்கொலை அல்லது தற்செயலான நீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதினேன். பெரும்பாலும் உடல்கள் பெண்களின் உடல்கள்தான். அதில் பெரும்பாலானவை ஆடைகள் இல்லாமல் இருந்தது. சில உடல்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலின் அறிகுறிகள், கழுத்தை நெரித்தல் மற்றும் பிற காயங்கள் இருந்தன. 1998 ஆம் ஆண்டு எனது மேற்பார்வையாளர் உடல் களை ரகசியமாக அப்புறப்படுத்தும் படி எனக்கு உத்தரவிட்டார்.

   

நான் முடியாது என்று சொன்னதும் என்னை கொடூரமாக தாக்கினார்கள். என்னுடைய மேற்பார்வையாளர் உடல்கள் கிடந்த குறிப்பிட்ட இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்வார். அதில் பெரும்பாலானவை சிறுமிகளின் உடல்கள். இதில் ஒரு சம்பவம் என்னை என்றென்றும் துரத்துகின்றது. 2010 ஆம் ஆண்டு ஒரு பெட்ரோல் பங்கில் இருந்து சற்று தூரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட பள்ளி சீருடை அணிந்த சிறுமி பாவாடை மற்றும் உள்ளாடைகள் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக கிடந்த நிலையில் பள்ளி பையுடன் அவரை குழி தோண்டி புதைக்க என்னை கூறினார்கள்.

 

மற்றொரு சம்பவத்தில் 20 வயது பெண்ணின் முகம் ஆசிட்டால் எரிக்கப்பட்டிருந்தது. அவரது உடலை எரிக்கும் படி என்னை வற்புறுத்தினார்கள். அந்த கொலைகளுக்கு நான் ஒரு சாட்சியாக இருந்தேன். இதுவரை ஏராளமான சிறுமிகள் மற்றும் பெண்கள் என அங்கு புதைக்கப்பட்டுள்ளனர். உரிய குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் உடல்களை தோண்டி எடுக்க போலீசார் தற்போது முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.