திடீர் விலகல்.. TVK- க்கு ஷாக் கொடுத்த பிரசாந்த் கிஷோர்.. செய்வதறியாமல் அதிர்ச்சியில் விஜய்..!

By Nanthini on ஆடி 6, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆளும் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றார். இப்படியான நிலையில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகியுள்ளார்.

பீகாரில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தனது சொந்த கட்சியை கவனிக்கவும் சிறிது காலம் ஓய்வுக்காகவும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது. விஜய் விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோரின் இந்த முடிவு தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.