ஆட்டோ வடிவில் பை அறிமுகம்… “இந்த விலைக்கு 17 நிஜ ஆட்டோ வாங்கிறலாமே” அதிர்ச்சியில் உறைந்த இணையவாசிகள்..!!

By Soundarya on ஆடி 5, 2025

Spread the love

பிரபல பேஷன் பிராண்ட் LOUIS VUITTON ஆட்டோ வடிவில் புதிய ஆடம்பரமான பேக்  ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. மக்களுடைய ஆடம்பர வாழ்க்கை மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில பிரபல நிறுவனங்கள் அதற்கு தீனி போடும் விதமாக தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் LOUIS VUITTON நிறுவனம் ஆட்டோ வடிவில் ஆடம்பர பேக் ஒன்றை அறிமுகம்  செய்துள்ளது. இதன் விலை 35 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேக் குறித்த விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஒரு பையை வாங்குவதற்கு உண்மையான 17  ஆட்டோக்களை வாங்கிவிடலாம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.