காதலிக்க மறுத்த +2 மாணவி.. பட்டப் பகலில் இளைஞர் செய்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

கடலூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த பிளஸ் டூ மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் முகத்தில் கிழித்து விட்டு சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அருள்குமார் பிளஸ் 2 மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். தொடர்ந்து மாணவியின் பின்னால் அலைந்து திரிந்து மாணவி அவரை காதலிக்க ஒப்புக்கொள்ளவே இல்லை.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அருள்குமார் நேற்று பேருந்து நிலையத்தில் மாணவி பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்தபோது மாணவியை அருள்குமார் முகத்தில் பேனா கத்தியால் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனைப் பார்த்து அங்கிருந்த சக மாணவர்கள் கூச்சலிட பொதுமக்கள் அந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற அருள்குமாரை தேடி வருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.