இன்றே உலகம் அழியும் நாள்?.. மக்களை தாக்க வருகிறது பேராபத்து… துல்லியமாக கணித்த பிரபலம்…!

By Nanthini on ஆடி 5, 2025

Spread the love

புதிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ஜப்பானை சேர்ந்த பெண் கார்ட்டூன் கலைஞர் ஆன ரியோ டட்சுகி என்ற பெண் 2025 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அதாவது இன்று ஜப்பானில் சுனாமி வரும் என்று 2021 ஆம் ஆண்டு தன்னுடைய கார்ட்டூன் ஓவியம் மூலம் கூறியிருந்தார். நேற்று முன்தினம் ககோசிமாவில் நிலநடுக்கம், சின்மோ எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால் அவரது கணிப்பு உண்மையாகி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை அவரது கணிப்பு படித்து விடுமோ என்று மக்கள் மிகவும் பயத்தில் உள்ளனர்.

இருந்தாலும் 2025 தொடங்கியதில் இருந்து கணிப்புகளை நிறுத்தி விட்டதாகவும் அவருக்கு தீர்க்கதரிசனம் எதுவும் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கு அடியில் விரிசல் ஏற்பட்டு 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை விட மூன்று மடங்கு சுனாமியால் உயரமான அலைகள் எழும் என்று அவர் கூறி இருந்ததால் மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் சிலர் பதற்றம் அடைந்துள்ளனர். இதனால் இன்று உலகம் அழிந்து விடும் என்று வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.

   

இந்த பதற்றத்தால் ஜப்பானில் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுனாமி வதந்தியால் ஜப்பான் சுற்றுலா துறையும் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பானில் பரவும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அந்த நாட்டை நில அதிர்வு நிபுணர்கள் நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படுவதற்கான எந்த தரவுகளும் இல்லை என்று தெளிவுபடுத்தி உள்ளன. இருந்தாலும் அந்த நாட்டு மக்கள் இன்றைய நாளை கடக்கும் வரை பயத்தில்தான் இருப்பார்கள் என்று நன்றாகவே தெரிகிறது.