சொந்த வீடு கனவா? சுமையா?.. ரசிகர்களின் மனதை வென்றதா 3BHK திரைப்படம்.. வெளியான X தள விமர்சனம்…!

By Nanthini on ஆடி 4, 2025

Spread the love

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள 3BHK திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, நீதான் ரகுநாத் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள நிலையில் படத்திற்கு அம்ரீத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் மேற்கொண்டுள்ள நிலையில் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஷ்வா தயாரித்துள்ளார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் எக்ஸ் தள விமர்சனம் வெளியாகி உள்ளது.

3BHK' படத்திற்கு வெற்றி உறுதி..! படம் எப்படி இருக்கு தெரியுமா ? முதல் விமர்சனம் இதோ.. | Tamil Cinema News

   

சொந்த வீடு என்பது பலருடைய கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஒரே மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கதை தான் இந்த திரைப்படம். இவர்களின் சொந்த வீடு கனவு நிறைவானதா என்பது தான் படத்தின் கதை ஆகும். இந்த திரைப்படம் பார்வையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழ வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். சில நேரங்களில் ஒரு மனமுடையும் தருணத்தை விட சின்ன சின்னதாக ஆயிரக்கணக்கான மனமுடையும் தருணங்கள் தான் நாம் ஒவ்வொரு நாளும் சுமந்து கொண்டிருப்போம்.

   

நடிகர் சித்தார்த்தின் '3 BHK' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! – heronewsonline.com

 

இந்த படம் இவை அனைத்தையும் கொண்டு நகர்கிறது. இந்த திரைப்படத்தை மொத்தமாக பார்த்து முடித்த பிறகு ஒரு நம்பிக்கை உணர்வு அனைவருக்கும் வந்து விடும். ஒரு சில படங்கள் நம்மை ஊக்குவிக்கும். அதுபோன்ற படமாக தான் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. குடும்பத்தோடு சேர்ந்து பார்ப்பதற்கு மிக சிறந்த படமாகும். இந்த திரைப்படம் ஒவ்வொரு மிடில் கிளாஸ் இன் குடும்ப கதையை தத்ரூபமாக எடுத்துக்காட்டுகிறது. பல நிராகரிப்புகள், தோல்விகள் மற்றும் பின்னடைவு என்று எது வந்தாலும் ஒரு நாள் நம்முடைய வாழ்க்கை மாறாதா என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்போம்.

சித்தார்த்தின் 40-வது படமான '3 BHK' டைட்டில் டீசர் எப்படி? | How is Siddharth's 40th film 3 BHK title teaser - hindutamil.in

அந்த நாளுக்காக அனைவரும் கடினமாக உழைப்போம். நாம் தினந்தோறும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயங்களையும் இந்த படம் அற்புதமாக பிரதிபலிக்கிறது. ஒரு கூடு கட்ட முயலும் அழகிய தூக்கணாங்குருவிகளாய் இந்த திரைப்படம் உள்ளது. கண்முன்னே அவர்களின் வாழ்க்கையை அழகிய தொகுப்பாய் இந்த திரைப்படம் காட்டுகிறது.

பெண்ணின் பிறந்த வீடு, ஒருபோதும் அவளுக்கு அன்னியமாகி போகாது, பாரமாகி விடாது என்று அழகாய் ஆழமாய் படத்தில் கதையை எடுத்துக் கூறியுள்ளனர். இன்றைய சூழலில் அவசியம் இந்த நம்பிக்கை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் இயக்குனர் அற்புதமாக இந்த படத்தில் அதனை எடுத்துக் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் திரைப்படம் குடும்பத்தினர் பார்த்து ரசிக்கக்கூடிய படமாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.