மீண்டும் அதே இடத்தை தக்க வைத்த 2 சீரியல்கள்… வருத்தத்தில் விஜய் டிவி… இந்த வார TRP ரேட்டிங்க் இதோ..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

வாரந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப்பட்டு  வரும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி கடைசி 10 ஆவது இடத்தை விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் பிடித்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் உள்ளது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எட்டாவது இடத்தில் உள்ளது. ஏழாவது இடத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது.

நெகட்டிவ்வான விமர்சனங்களால் இந்த சீரியல் டாப் 5 இல் கூட நுழைய முடியாமல் சமீப காலமாக திணறி வருகிறது. அடுத்தது ஆறாவது இடத்தில் சன் டிவியின் அன்னம் சீரியல் பிடித்துள்ளது. தற்போது தொடங்கப்பட்ட விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் உள்ளது.

   

வரும் வாரங்களில் இந்தசீரியலில்  நல்ல மாற்றம் இருக்கும் என்பதால் டாப் மூன்றாவது இடத்தை பிடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்து மருமகள் மற்றும் மூன்று முடிச்சு மகா சங்கமம் தான் எப்போதும் போல முதல் இடத்தை பிடித்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கம் பெண்ணே, கயல் சீரியல் 2 மற்றும் டாப் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.