அஜித் குமார் லாக் அப் மரணம் எதிரொலி.. தமிழகம் முழுவதும் காவலர்களுக்கு பரந்த உத்தரவு.. இனி இது எதுவும் செய்யக்கூடாது..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

சிவகங்கையில் தனிப்படையினரால் விசாரிக்கப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க டிஜிபி அதிரடி உத்தரவிட்டுள்ளார். அஜித் குமார் மரணம் தமிழக முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை அதிகாரப் போக்குக்கு எதிரான குரல்கள் எழ தொடங்கியுள்ளது. அதன் எதிரொடியாக தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேசிர்வாதம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அதன்படி போலீசார் இனி harassment இல் ஈடுபடக்கூடாது. ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தின் போது லத்திகளை பயன்படுத்தக் கூடாது. கஸ்டடி மரணம், கஸ்டடியில் சித்தரவதை என எதுவும் கூடாது. முறையாக பணியாற்றாத டிஎஸ்பி-களை இடமாற்றம் செய்ய வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.