சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை ரோகிணி.. அதுவும் யாருமே எதிர்பார்க்காத கேரக்டரில்.. வெளியான ப்ரோமோ..!

By Nanthini on ஆடி 2, 2025

Spread the love

விஜய் டிவியில் டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கக்கூடிய சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கதாநாயகன் முத்து மற்றும் மீனாவிற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் ரோகினி கேரக்டரின் நடித்து வரும் சல்மாவுக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் தான் நடித்துக் கொண்டிருந்தார்.

சிறகடிக்க ஆசை' ரோகிணிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? குடும்ப  புகைப்படம் வைரல்..! | Tamil Cinema News

   

அந்த சீரியல் முடிவடைந்த நேரத்தில்தான் இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது ஐயோ பாவமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. ஊரில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் எனக்கு தான் வருமா என்று கேட்பது போலத்தான் இவருக்கு மட்டும் வாரம் வாரம் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது. இப்படியான நிலையில் ரோகிணியாக நடித்து வரும் சல்மா அருண் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வினோதினி சீரியலில் களமிறங்க உள்ளார்.

   

போச்சு.. வசமாக சிக்கிக்கொண்ட ரோகிணி! சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ -  சினிஉலகம்

 

இந்த சீரியலில் தெய்வமகள் சீரியல் பிரபலம் கிருஷ்ணா நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருடைய மனைவி பிரிந்து போய்விட்டதாகவும் அவர் தன்னுடைய மகனை தனியாக வளர்த்து வருவது போன்று தான் கதை நகர்கின்றது. இப்படியான நிலையில் கிருஷ்ணாவின் மனைவி யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் கிருஷ்ணாவின் மனைவியாக சல்மா அருண் என்ட்ரி கொடுக்கின்றார். கணவரை டார்ச்சர் செய்யும் மனைவி கேரக்டரில் தான் சல்மா நடித்துள்ளார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.