தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போது தீவிரமாக தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளன. குறிப்பாக திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் தங்களுடைய ஆட்சி தான் அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால் அதற்கான வேலைகளை முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளை வைத்து செய்து வருகின்றார். அதேசமயம் திமுகவின் கூட்டணியையும் பலப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் களம் இறங்கியுள்ளார்.
இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. அதனைப் போலவே கூட்டணி குறித்து ராமதாசுடன் திமுக மறைமுகமாக பேசுவதாக கூறப்படுவதாலும் இரண்டு கட்சிகளும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்த இரண்டு காரணங்களை முன்வைத்து திமுக கூட்டணியில் இருந்து இரண்டு கட்சிகளும் எந்த நேரமும் விலகக்கூடும் என்றும் அதன் பிறகு அதிமுக அல்லது தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
