ஒருவர் பிறந்த சமயத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றாரோ அந்த நட்சத்திரம் அமைந்த வீட்டை குறிக்கிறது. சந்திரன் எங்கே இருக்கிறதோ அதை தான் நாம் ராசி என அழைக்கிறோம். நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாவது இடத்தில் சந்திரன் வரும்போது அதனை சந்திராஷ்டமம் என்கின்றோம். சந்திராஷ்டமம் என்றால் அஷ்டமம் +சந்திரன் என்று பொருள்படும். உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் இருப்பது இரண்டேகால் நாட்கள் தான் சந்திராஷ்டமம் காலமாக எடுத்துக் கொள்ளப்படும். அதேசமயம் நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17 வது நட்சத்திரத்தில் சந்திர ன் சஞ்சாரம் செய்யும் காலமும் சந்திராஷ்டமம் தான். இந்த நாட்களில் முக்கியமான சுப நிகழ்ச்சிகள் நடத்துவது தவிர்க்கப்படும்.
மணமகன் மற்றும் மணமகளுக்கான திருமணநாள், பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம், வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளும் சந்திராஷ்டமும் நாளில் செய்ய மாட்டார்கள். சந்திராஷ்டமத்தின் போது மனதில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். சில நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். காரணம் சந்திரன் மனதை ஆளும் கிரகம். இதனால் மனநிலையிலும் கருத்துக்களிலும் கவன குறைவு காணப்படும். இதனால் சந்திராஷ்டம நாட்களில் சற்று நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது அவசியமாகும்.
