இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொபைல் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் 10 முதல் 20% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ள நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் ஏர்டெல் அடுத்ததாக vodafone ஐடியா நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில் மூன்று நிறுவனங்களுமே கடந்த ஆண்டு அடுத்தடுத்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
