Whatsapp பயனர்களுக்கு அசத்தலான அப்டேட்.. படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் AI…!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக வலைத்தள பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக whatsapp செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் whatsappல் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி whatsapp மெசஞ்சரில் பயனர்கள் படிக்காமல் விட்ட மெசேஜ்களை மெட்டா AI மூலம் சுருக்கி தரும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் whatsapp பயனர்கள் படிக்காமல் இருக்கும் நீண்ட மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும். அதனை சுருக்கமாக படித்துக் கொள்ளலாம். இந்த அம்சத்தை whatsapp பயனர்கள் கேட்டால் மட்டுமே அதை செய்யும். மேலும் இவ்வாறு சுருக்கி தரும் மெசேஜ்கள், மெட்டா நிறுவனத்தின் சர்வர்கள் அல்லது whatsapp சிஸ்டத்தில் ஸ்டோர் ஆகாது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.