தமிழகம் முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறை… நிலம் வைத்திருப்பவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

தமிழகத்தில் அனுமதி அற்ற மனை பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள் இன்று ஜூலை 1 முதல் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளில் தனிமனைகளை வாங்கியவர்களுக்கு இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல, மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை, இன்று ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரை www.tnhillarealayoutreg.in என்ற தளத்திற்குப் பதிலாக, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவே விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.