நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் மிலந்த் சோமன். அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திற்கு பிறகு லெக்ஸ் பாண்டியன், வித்தகன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். தமிழில் பரிச்சயமான நடிகர் இல்லை என்றாலும் இந்தியில் இவர் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவருக்கு தற்போது 59 வயதாகும் நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு பிரெஞ்சு நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அப்போது வெறும் 26 வயது தான். மிகவும் இளம் வயது பெண்ணை தான் மிலந்த் சோமன் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு பல விமர்சனங்கள் எழுந்தது. மகள் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பலரும் கிண்டல் அடித்தனர். அதன் பிறகு இதையெல்லாம் செவி சாய்க்காமல் தன்னுடைய மனைவியுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

இப்படியான நிலையில் இவர் தனது மனைவியுடன் சேர்ந்து மூன்று நாட்களில் 90 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சென்றது மட்டுமல்லாமல் 20 கிலோ மீட்டருக்கு ஓடியும் சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த அவர், நாள் 2 & 3 வெறும் மலைகள், மலைகள், மலைகள், காட் பெ காட், காட் பெ காட், பழைய வசனத்தை சுருக்கமாகச் சொல்லணும்னா, இதுவரைக்கும் 3 நாட்கள் தொடர்ந்து 90 கிமீ சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 20 கிமீ ஓட்டம், அற்புதமா இருக்கு, வழியில் செல்ஃபி எடுக்க நிறைய புஷ்அப்கள்.. வழியில் ஃபிட்டர் இந்தியர்களைச் சந்திப்பது, மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்பார்கள், கியூ கார்டே ஹோ இட்னா, மர்னா ஹாய் தோ ஹை – ஆனால் நான் ஒவ்வொரு வயதிலும் மனம் மற்றும் உடலின் திறனின் வரம்புகளை ஆராயவில்லை என்றால், நான் உண்மையில் வாழவில்லை அல்லது சர்வவல்லமையுள்ளவரிடமிருந்து நான் பெற்ற அற்புதமான பரிசுகளுக்கு நன்றியைக் காட்டவில்லை என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
