“அவர் தான் வேண்டும்” அந்த நடிகைக்காக 150 நாட்கள் காத்திருந்த இயக்குனர் ராம்… அந்த பிரபலம் யார் தெரியுமா..?

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

இயக்குனர்  ரேம் பேரன்பு படத்திற்கு பிறகு பறந்துபோ படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாகவும், மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி ஹீரோயினியாகவும் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் மிதுல் ரேயான், அஞ்சலி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில்  நடித்துள்ளார்கள். இந்த படம் ஜூலை நான்காம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் நடிகை கிரேஸ் ஆண்டனியின் கால் ஷீட்டுக்காக இயக்குனர் ராம் நான்கு மாதங்கள் காத்திருந்தாராம். இது குறித்த அவர் கூறுகையில், “கனவுகளை அடைவதற்கு போராடும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதைதான் இது. தங்களால் அடைந்து விட முடியாத அனைத்தையும் தங்களுடைய குழந்தைகள் அடைந்துவிட வேண்டும் என்பதற்காக அயராது உழைக்கும் அம்மா அப்பாவின் கதை.

   

அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு எது தேவை என்று குழந்தைகளிடம் அவர்கள் கேட்பதில்லை. குழந்தைகளின் உலகத்திற்கும் பெற்றோர்களின் உலகத்திற்குமான இடைவெளி கூடிக்கொண்டே போகிறது. நடிகை கிரேஸ் ஆண்டனிக்கு தமிழில் இது முதல் படம். அவர் நடித்த அப்பன் படம் பார்த்தேன்.

   

 

அதில் 15 நிமிடமே ஒரு கேரக்டரில் வந்து  பிரம்மாதப்படுத்தியிருப்பர்.  இவர் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பது உறுதியாக இருந்து அவருக்காக நான்கு மாதம் வரை காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். கிரேஸ் கொஞ்சம் முயற்சி செய்தால் ஊர்வசி இடத்திற்கு வந்துவிடுவார். தமிழில் அவருக்கு ஒரு கதவு திறக்கும் என்பது என்னுடைய கனவு” என்று கூறியுள்ளார்.