38 பேருக்கு மீண்டும் வாழ்க்கையை கொடுத்தது “இறுகப்பற்று” படம்… உண்மையை உடைத்த நடிகர் விக்ரம் பிரபு..!!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ – சானியா ஐயப்பன், விதார்த்- அபர்ணாதி ஆகியோர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த படம் இறுகப்பற்று. காதல் மற்றும் குடும்ப கதையில் தமிழ் பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக  இருக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் கடந்த 2023 ஆம் வருடம் அக்டோபர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படம் நவம்பர் ஆறாம் தேதி ஓடிடியில் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம்  ரிலீஸிற்கு பின்னர் பழைய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, “இறுகப்பற்று  படம் ரிலீஸ் ஆகி பயங்கரமாக ரீச் ஆனது.  படத்தின் கதையை முடிச்சிட்டு இதனால் 1000 கல்யாணம் Save ஆகும் என்பது தான் பேச்சு. ஆனால் படம் வெளியாகி இரண்டு வாரங்களில் திருச்சி நீதிமன்றத்தில் 38 விவாகாரத்து வழக்கு ட்ராப் ஆனது” என்று கூறியுள்ளார்.