“என்னை தொட்டால் நீ 35 பீஸ் ஆகிடுவ” முதலிரவில் மிரட்டிய பெண்… அதிர்ச்சியில் உறைந்துபோன கணவர்..!!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து முதலிரவிற்கு வந்த கணவரிடம் “என் மீது நீ கை வைத்தால் நீ 35 பீஸ் ஆகிவிடுவாய். நான் அமனுக்கு சொந்தம்” என்று பெண் ஒருவர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. பெற்றோர் வற்புறுத்தியதால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்ததாக அந்த பெண் கூறி இருக்கிறார். மேலும் இரவு முழுவதும் உயிருக்கு பயந்து தூங்கவில்லை என்று கணவர் நிஷாந்த் கூறியிருக்கிறார். ஆனால் இது குறித்து அவர் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இந்நிலையில் அப்பெண் அளித்துள்ள பேட்டியில், “நான் அவரை தொட ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் கத்தியை நான் எடுக்கவில்லை. அவரிடம் தான் ஒரு கத்தி இருந்தது. அவர்தான் என்னை மிரட்டினார். திருமணத்திற்கு சில மணி நேரத்துக்கு பிறகு  ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு மகள் இருப்பதாகவும் எனக்கு தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார். அவர் தான் என்னை ஏமாற்றினார் தன்னுடைய முதல் மனைவி என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணிடம் பேசினார்” என்று பல குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.