தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.
இப்படியான நிலையில் மக்கள் நல கூட்டணி பிரிந்த பிறகு மதிமுகவிலிருந்து யாரையும் திமுக சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் 12 எம்எல்ஏக்கள் தேவை என துரை வைகோ பேசிய அடுத்த இரண்டு நாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுகவை சேர்ந்த ஒருவரை (முத்துரத்தினம்) திமுகவில் முதல்வர் ஸ்டாலின் இணைத்துள்ளார். இதனால் ஏற்கனவே திமுக மீது அதிருப்தியில் இருக்கும் மதிமுக தலைமை மேலும் எரிச்சலாகி திமுக கூட்டணியில் இருந்து மொத்தமாக விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
