41 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்… நடிகை சதா ஓபன் டாக்..!!

By Soundarya on ஆனி 23, 2025

Spread the love

நடிகை சதா ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்து கவனம் ஈர்த்தார். தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்தார். உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பிறகு டார்ச் லைட் என்ற படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தார்.

தற்போது முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். தற்போது புகைப்பட கலைஞராக மாறிவிட்டார். காட்டுக்குள் சென்று பறவைகள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார். 41 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார். இது குறித்த அவர் கூறுகையில், “திருமணத்தின் மீது எனக்கு ஆசை இல்லை. புகைப்படத்துறையில் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது. அதன் பிறகு பார்க்கலாம். எதற்கு அவசரம்?” என்று கூறியுள்ளார்.