ஆந்திர பிரதேச முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியினுடைய காரில் கான்வாயில் ஏற்பட்ட விபத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்கி உள்ளார்கள். முன்னதாக இந்த சம்பவம் கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று குண்டூர் மாவட்டத்தில் உள்ள எடுகூர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி பால்நாடு மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒய்ஆர்சி தொண்டரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக பயணித்துக் கொண்டிருந்தார்.
Former #Andhra Pradesh CM #JaganMohanReddy’s vehicle ran over a 65-year-old supporter who was trying to shower flowers on the #YSRCP chief in #Sattenapalli .#JaganMohan #jaganreddy #guntur #AndhraPradesh
Watch video (trigger warning): pic.twitter.com/uDed0N1Wg6
— Salar News (@EnglishSalar) June 22, 2025
அப்போது அவருடைய கான்வாயை பின்தொடர்ந்த பெரும் கூட்டத்தில் சிங்கையா என்பவர் மலர்துவ சென்ற போது தவறி விழுந்து ஜெகன்மோகன் காரின் முன் பக்க சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்தார். இதனை அடுத்து அந்த ஆதரவாளரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. முதலில் ஜெகன் கான்வாயில் ஒரு வாகனத்தில் ஏறி விழுந்ததால் விபத்து நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஜெகன்மோகன் பயணித்த வாகனத்தின் அடியில் நசுங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
