உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்வப்னா. 22 வயதான இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த நரேந்திர சவுகான் என்பவருக்கும் கடந்த மாதம் இரண்டாம் தேதி திருமணம் நடந்தது. அப்போது நரேந்திர சவுகானின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகளும் வரதட்சணையாக மணப்பெண்ணின் வீட்டார் கொடுத்துள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு புதுப்பெண் தன்னுடைய கணவர் நரேந்திர சவுகானோடு கோட வா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் அந்த பெண்ணிடம் மாப்பிள்ளை வீட்டார் கூடுதலாக வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்கள். அதாவது கூடுதலாக புல்லட் , மேலும் 3 லட்சம் ரூபாய் கூடுதலாக வேண்டும் என்றும் கூறி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஸ்வப்னாவிற்கு தொடர்ந்து வரதட்சனை தொல்லை கொடுத்து வந்தால் நரேந்திர சவுகானின் குடும்பத்தினர் அப்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து பிறகு அதை தற்கொலையாக திசை திருப்புவதற்காக உடலை அவருடைய வீட்டின் அறையில் மின்விசிறியில் கட்டி தொங்கவிட்டுள்ளார்கள். அதன்பிறகு ஸ்வப்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி உள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அந்த பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் ஸ்வப்பனவை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதனை அடுத்து தற்கொலை நாடகமாடிய நரேந்திர சவுகானை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
