செம ஐடியாவா இருக்கே..! “இதுதான் சரியா இருக்கும்” முக்கிய சின்னத்தை குறிவைத்த TVK தலைவர் விஜய்…!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

நடிகர் தளபதி விஜய் ஹெச் வினோத் இயக்கத்தில் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தான் இவருடைய கடைசி படம் என்றும் அறிவித்துள்ளார். அதன் பிறகு முழுநேர அரசியல் தீவிரமாக இறங்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. அதன்படி  கடந்த 3ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்திருந்தார்.

   

விக்ரவாண்டியில் முதன்முதலாக மிகப்பிரம்மாண்டமான மாநாட்டையும் நடத்தினார்.  மேலும் கட்சியின் சார்பாக மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பண்டிகை தின வாழ்த்துக்கள் என ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, மறுப்பக்கம் இன்னும் அரசியல் களத்தில் வேரூன்றாத  தமிழக வெற்றி கழகத்தோடு சற்று ஆதரவு மற்றும் நட்பு நிலைப்பாட்டையே பெரும்பாலான கட்சிகள் முன்னெடுத்து வருகிறது. இது விஜயின் அரசியல் வருகையின் மீது பெரும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. விஜய்யின் கட்சியில் இளைஞர்கள் பட்டாளம் ஏராளமாக இருக்கிறார்கள். பெண்கள் ஆதரவு என விஜய்யின் வாக்கு வங்கி   தற்போது ஒரு நிலையான சதவீதத்தில் தான் இருக்கிறது.

   

 

இந்த நிலையில் தான்   அவருடைய ரசிகர்களும் , அரசியல் ஆதரவாளர்களும் இப்போது கட்சியின் புதிய தேர்தல் சின்னம் என்னவாக இருக்கும்? அது ஒரு பொதுவான சின்னமாக இருக்குமா? அல்லது முற்றிலும் புதிய சின்னமாக இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் ஆட்டோ சின்னத்தை கையில் எடுப்பர் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.