FLASH NEWS: இருசக்கர வாகனங்கள் விலை ரூ.5000 வரை உயர்வு…? பெரும் அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

2026 ஜனவரி முதல் புதிதாக இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு  ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து இரண்டு சக்கர வாகனங்களிலும் ஏவிஎஸ் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது தற்போது சுமார் 40% இருசக்கர வாகனங்களில் இந்த வசதியானது இல்லை. இந்த தொழில்நுட்பம் இருந்தால் திடீரென்று பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துக்கள் குறையும். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்  அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது.

தற்போது 125சிசிக்கு மேல் இருக்கும் வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக இருக்கிறது. தற்போது இரு சக்கர வாகனம் வாங்கும்போது ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் ஜனவரி 2026 முதல் இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட இருக்கிறது. மத்திய  அரசின் இந்த புதிய அறிவிப்பால் பைக்குகள் விலை 5,000 ரூபாய் வரை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.