OMG: தாய் கண்முன்னே மகளை கவ்வி சென்ற சிறுத்தை.. கோவையில் நடந்த கொடூர சம்பவம்…!

By Nanthini on ஆனி 21, 2025

Spread the love

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த பச்சைமலை எஸ்டேட்டில் தாய் கண் முன்னே நான்கு வயது சிறுமி ரோஷினியை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட்டின் தென் பிரிவில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி மனோஜ் மற்றும் மோனிகா என்ற தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு ரோஷினி என்ற ஏழு வயது மகள் உள்ளார்.

ரோஷினி தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிறுத்தை ஒன்று தாய் மோனிகாவின் கண்முன்னே சிறுமியை கவ்வி சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் மோனிகா என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சிறுத்தை சென்ற வழியில் சிறுமியை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.