“விராட் கோலியை கைது பண்ணுங்க” இதெல்லாம் நியாயமே இல்ல… பரபரப்பை கிளப்பிய கூல் சுரேஷ்..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

பிரபல நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான கூல் சுரேஷ் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அல்லு அர்ஜுனை கைது செய்தீர்கள் ஆனால் விராட் கோலியை ஏன் கைது செய்யவில்லை? என்று பேசி உள்ளார். அதாவது, “ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாடும்போது 11 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்கள். அந்த விழாவில் தள்ளும் முள்ளும் நடந்தது. ஆனால் யாரையுமே காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதே விஷயம் சினிமாவில் நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும் .  சினிமா தியேட்டரில் ஒரு விபத்து நடந்தால் உடனே அந்த ஹீரோவை காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறீர்கள்.

ஆனால் கிரிக்கெட் விழாவில் 11 பேர் இறந்ததற்கு யாரையுமே கைது செய்யவில்லை. இது என்ன நியாயம்? புஷ்பா2 படம்  ரிலீஸ் ஆனபோது கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்தார். அப்போது அல்லு அர்ஜுனை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதேபோல இப்போது விராட் கோலியை கைது செய்யவில்லை? என்று கேட்டுள்ளார். கிரிக்கெட்டையும், சினிமாவையும் ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்? என்று கேள்வியும் எழுப்பி உள்ளா.ர் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.