கேஸ் இணைப்புடன் ஆதாரை லிங்க் செய்வது எப்படி..? இதை செய்தால் மட்டுமே மானியம் கிடைக்கும்…!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே கேஸ் சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்களும் சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு சார்பிலும் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி பிரதமர் மோடியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு மானிமையும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் Ujjwala Yojana மற்றும் PAHAL திட்டத்தின் கீழ் தள்ளுபடி உடன் சமையல் கேஸ் சிலிண்டர் பெரும் பயனாளிகள் ஆதார் அடிப்படையில் இ கேஒய்சி செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  கேஸ் கனெக்சனுடன் ஆதாரை இணைத்தால் மட்டும் தான் மானியம் கிடைக்கும்.

   

இதனை இணைப்பதற்கு முதலில் LPG (HP, Indane, Bharat Gas) வழங்குநரின் இணையதளத்துக்கு “LPG services’ – ‘Join DBTL using Aadhaar’ ‘Download Forms’-தேர்ந்தெடுக்கவும்.

   

பின்பு படிவம் 1 & படிவம் 2 என இரண்டையும் பதிவிறக்கம்  செய்து தேவையான ஆவணங்களுடன் படிவம் 1-ஐ வங்கியிலும், படிவம் 2-ஐ LPG விநியோகஸ்தர் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கவும்.