அரசுப்பள்ளியின் அலங்கோலம்… மழையால் ஒழுகும் வகுப்பறை…. குடைபிடித்தபடி பாடம் படிக்கும் மாணவர்கள்…!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

மேற்கு வங்கத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹூக்லியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் கூரையில் கசிவு ஏற்பட்டதால் மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பின் போது குடைகளை பயன்படுத்திக்கொண்டு பாடம் படிக்கிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தொடக்கப்பள்ளியில் 5 முதல் 10 வயதுடைய சுமார் 68 இளம் மாணவர்கள் உள்ளார்கள். இவர்கள் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறைக்குள் குடைகளை பிடித்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி நான்கு வகுப்பறைகள் இடிந்து விழுந்துவிட்டததாம். மற்ற மூன்று அறைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாம்.

அவையும் மோசமான நிலையில் தான் உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தா குப்தா கூறுகையில், “தற்போதைய சூழ்நிலை மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மற்றும் வகுப்பறைகளை அவசரமாக சரி செய்ய வேண்டியது அவசியத்தை வழியுறுத்தி பலமுறை அந்த தலைமை ஆசிரியர் அரசிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.