நடிகை தனுஷ் நடி ப்பில் உருவாகி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நாகர்ஜுனா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படமானது சுமார் 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மொத்தமாக 120 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் தான் நடித்துள்ளார். திருப்பதியில் நடுரோட்டில் இயக்குனர் சேகர் கம்முலா நடக்க விட்டதாக குபேரா பட ஆடியோ லாஞ்சில் கூறியிருந்தார் தனுஷ். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தும் நடித்துள்ளார். தன்னை உடல் எடை குறைக்க சொன்ன ஒரே இயக்குனர் இவர் தான் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தனுஷ் இந்த படத்திற்காக சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். இந்த படத்தில் நடித்தவர்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்றால் அது தனுஷ் தான். அதேபோல தனுஷுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது நாகர்ஜுனா. இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். தனுஷுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். அடுத்ததாக இயக்குனர் சேகர் கம்முலா மற்ற படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை பெரும்பாலும் சம்பளம் வாங்குவாராம். ஆனால் இந்த படத்திற்காக அவர் அவ்வளவு சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் படத்தில் லாபத்திலிருந்து பங்கு எடுத்துக் கொள்வாராம்.
