ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் போதுமானதா..? இல்லையா…? இதோ உண்மையை தெரிஞ்சிக்கோங்க..!!

By Soundarya on ஆனி 18, 2025

Spread the love

நம்முடைய ஒவ்வொரு ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.  ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் அதாவது  8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 8 டம்ளர் என்பது அளவு கிடையாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நம்முடைய உடல் தினசரி  இழக்கும் நீரின் அளவை ஈடு செய்யும் அளவிற்கு தண்ணீர் குடிப்பது சரியான முறை. நம்முடைய உடலுக்கு குறைந்தது 1.5 லிட்டர் திரவம் அவசியம். இவ்வாறு இருந்தால் நீர் இழப்பை தவிர்க்க முடியும். சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதில் இருந்து கிடைத்துவிடும். பழங்கள், காய்கறிகள், இறைச்சிகள், பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றைப் பொறுத்து இந்த அளவானது மாறுபடும். அவரவர் உடல் அமைப்பு, காலநிலைகளுக்கு ஏற்றவாறு தண்ணீர் தேவை.

நம்முடைய உடலில் இழக்கப்படும் நீரின் அளவிற்க்கு ஏற்ப நாம் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். கடின உழைப்பு மேற்கொள்பவர்கள் மட்டுமல்லாமல் ஓய்வு எடுப்பவர்களுக்கும் உடம்பில் நீர் இழக்கிறது.  ஒரு ஆரோக்கியமான நபர் சிறுநீர் மூலமாக தினமும் 500 மில்லி லிட்டர், சுவாசம் மற்றும் சருமம் மூலமாக 700 மில்லிமீட்டர் நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரை இழக்கிறான். இது கடுமையான வெயில் அல்லது உடற்பயிற்சியின் போது அதிகரிக்கலாம்.

   

எனவே ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். உங்களுடைய சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தால் குடிக்கும் தண்ணீர் போதுமானது. அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கூடுதலாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.