திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பழனி, மருதமலை போன்று திருச்செந்தூரிலும் தமிழில் குடமுழுக்கு நடைபெறும். யாரும் சொல்லித்தான் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்ற நிலை இல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இதுவே திராவிட மாடல் அரசின் கொள்கை” என்று கூறியுள்ளார்.
