“என்னால தாங்கிக்கவே முடியல”.. கண்ணீர் விட்டு கதறி அழுத பிக்பாஸ் ரியா.. ரசிகர்களை கலங்க வைக்கும் ஷாக் வீடியோ..!

By Nanthini on ஆனி 17, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ரியா தியாகராஜன். வைல்ட் கார்டு என்றியாக நுழைந்த இவர் நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவி நடத்திய பல நிகழ்ச்சிகளில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதேசமயம் சினிமாவிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் தற்போது ரியா கண்ணீருடன் கதறி எழுது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்ன மாதிரி ஆளுங்க முன்னேறக்கூடாதா!! அழுது புலம்பிய பிக்பாஸ் ரியா.. - விடுப்பு.கொம்

   

அந்த வீடியோவில் ரியா தன்னுடைய அப்பா பற்றி கண்ணீருடன் உருக்கமாக பேசியுள்ளார். அதில், எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் நிறைய சண்டைகள் வந்து கொண்டிருக்கும். அவரிடம் பேசவே மாட்டேன். சண்டை போட்டுக் கொண்டே இருப்பேன். அவர் எங்கே போய் விடப்போகிறார் என்று குருட்டு நம்பிக்கையில் தான் நான் இருந்தேன். ஆனால் திடீரென்று ஒன்று நடந்தது. விபத்தில் என்னுடைய அப்பா எங்களுடன் இல்லாமல் போய்விட்டார். அதன் பிறகு தான் அவர் என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்ன பிரச்சனை இருந்தாலும் பெற்றோருடன் பேசாமல் பார்க்கபோகாமல் எல்லாம் இருக்காதீங்க என்று கண்ணீருடன் ரியா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Nagapriya பதிவைப் பகிர்ந்துள்ளார் (@riya_thiyagarajan)