45 வயதிலும் இளமையாக இருப்பதற்கு காரணம் சொன்ன நடிகர் சித்தார்த்.. ஓ இதுதான் விஷயமா..?

By Nanthini on ஆனி 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனது கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த நடிகர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சித்தார்த். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடிகராக இருந்து வருகின்றார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் என பழமொழிகளில் நடித்துள்ள இவர் ஆங்கிலத்தில் ஒரு படம் நடித்துள்ளார். கதை ஆசிரியர், தயாரிப்பாளர் மற்றும் பாடகராகவும் இருந்துள்ளார். சித்தார்த் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Pin on Cool photos

   

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. படங்களில் நடிப்பதை தாண்டி நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்தை தைரியமாக பதிவு செய்யக்கூடியவர். அதனால் பல பிரச்சனைகளையும் சித்தார்த் சந்தித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த சித்தார்த்துக்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் பாய்ஸ் படத்தில் பார்த்தது போலவே இன்றும் அதே இளமையுடன் இருக்கின்றார். மணிரத்தினம் மற்றும் சங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சித்தார்த்தை ஷங்கர் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சித்தார்த் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய இளமை ரகசியம் குறித்து பேசி உள்ளார்.

   

சித்தார்த் பிறந்த நாள் ஸ்பெஷல்: அரிதான திரைச் சாதனைகளும் அசலான சமூக அக்கறையும் | siddharth - hindutamil.in

 

அதில், நான் இளமையாக இருப்பதற்கு என்று தனியாக மெனக்கட்டது கிடையாது. ஆனால் நான் என் மூளையில் ஒரு இளைஞன் எப்படி யோசிப்பாரோ அதேபோன்றுதான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். இளமைக்காக நான் தனியா எதுவுமே பண்ண மாட்டேன். நடிகர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு வரம் எப்போதுமே இளமையாக இருப்பது என்று நான் நிறைய பேர் கிட்ட சொல்லுவேன். படப்பிடிப்பில் எப்போதுமே வெயில் பட விட மாட்டாங்க. குடை பிடிச்சுகிட்டே நிப்பாங்க. கொஞ்சம் வேர்வை வந்தா கூட உடனே வந்து தொடச்சி விடுவாங்க. நிறைய மேக்கப் போட்டு கிரீம் போட்டு தான் தூங்கவே வைப்பாங்க. நான் இன்னைக்கும் இளமையா இருக்குறதுக்கு என்னுடைய மேக்கப் மேனனுக்கு தான் நன்றி சொல்லணும் என்று சித்தார்த் பேசியுள்ளார்