தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது சன் டிவி தான். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிதான் சன் டிவி. புத்தம் புதுத் தொடர்கள் மற்றும் வித்தியாசமான கதைக்களம் என காலத்திற்கு ஏற்றவாறு ரசிகர்களை கவரும் வகையில் அடிக்கடி புதிய சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. எப்போதுமே தமிழ் சின்னத்திரையில் டிஆர்பி யில் டாப் இடத்தில் இருப்பது சன் டிவி மட்டும் தான்.
)
குறிப்பாக இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு, மருமகள், சிங்க பெண்ணே, கயல் ஆகிய சீரியல்கள் டிஆர்பி யில் டாப் இடத்தில் இருக்கும். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து புது சீரியல்களையும் களமிறக்கி வருகிறது. தற்போது இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சில தொடர்கள் காலையில் மறு ஒளிபரப்பாகி வருகின்றது. அப்படி காலையில் ஒளிபரப்பாகி வந்த சிங்கப் பெண்ணை மற்றும் எதிர்நீச்சல் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சிங்க பெண்ணே திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு, எதிர்நீச்சல் சீரியல் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
