PM KISAN: வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000.. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!

By Nanthini on ஆனி 15, 2025

Spread the love

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான நலிவடைந்த விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 19 தவணைகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில் இருபதாவது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அதே சமயம் இந்த முறை 2000 ரூபாய் தவணைத் தொகை பெறுவதற்கு இ கேஒய்சி அப்டேட் அவசியம் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இப்படியான நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது 20வது தவணையை அடுத்த வாரம் மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.