BREAKING: பள்ளிகளுக்கு 115 நாட்கள் விடுமுறை.. காலையிலேயே மாணவர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்..!

By Nanthini on ஆனி 14, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான மாதிரி நாள்காட்டியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஜூன் 2 கல்வியாண்டு தொடங்கி 2024 ஏப்ரல் 24ஆம் தேதி உடன் முடிவடைவதாகவும் மொத்த வேலை நாட்கள் 210 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் என மொத்தம் சேர்த்து 2025ஆம் கல்வியாண்டுக்கு 115 நாட்கள் விடுமுறை. செப்டம்பர் 18 முதல் 26 வரை காலாண்டுத் தேர்வுகள்.

செப்டம்பர் 29 முதல் அக்டோபர்  5ம் தேதி வரை (9 நாட்கள்) காலாண்டு விடுமுறை. காலாண்டு விடுமுறையிலேயே ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை வருகிறது.  ஜனவரி 14 2026 (புதன்) முதல் ஜனவரி 18 வரை பொங்கல் விடுமுறை. பிப். 1, 2026 தைப்பூச நாள் விடுமுறை அளிக்கப்படும். 10.04.2026 முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம். 24.04.2026 கடைசி வேலை நாள். 25.04.2026 முதல் அடுத்த ஆண்டிற்கான கோடை விடுமுறை தொடக்கம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.