தமிழக வெற்றி கழகத்தின் கல்வி விருதுகள் வழங்கும் விழாவானது மாமல்லபுரத்தில் இன்று மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு தவெக சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய், “என்னை காமராஜர், இளைய காமராஜர் என்றெல்லாம் எதுவும் சொல்லாதீர்கள். 2026 தேர்தலை பற்றி எதுவும் பேச வேண்டாம். பள்ளி பற்றியும் ஆசிரியர்கள் பற்றியும் பேசுங்கள். அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். ஆனால் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
