குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே போயிங் 787 ரக சேர் இந்திய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் விமானம் கீழே விழுந்து கொழுந்து விட்டு எரியும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. ஆனால் விமானம் புறப்பட்ட 3 நிமிடத்திலேயே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேகானி நகரில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது.
இதில் 230 பயணிகள் உட்பட 10 விமான ஊழியர்கள் பயணித்துள்ளார்கள். இவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்நிலையில் இதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய boardin gpass சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவுக்குக் வெளியாகவில்லை.
