ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டாங்க… அவங்கள வாழ விடுங்க… ஸ்ருதி நாராயணனுக்கு ஆதரவாக கட்ஸ் பட இயக்குனர்..!!

By Soundarya on ஆனி 12, 2025

Spread the love

நடிகை ஸ்ருதி நாராயணன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான சிட்டாடல் ஹனிபனி வெப் சீரிஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பாக இவருடைய ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று ஸ்ருதி விளக்கம் அளித்து இருந்தார். இதனை அடுத்து அவருக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.

   

இந்நிலையில் இயக்குனர் ரங்கராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள கட்ஸ் படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதி. இந்த படத்தின் வெளியீடு பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் படத்தின் இயக்குனர் ரங்கராஜ் ஸ்ருதியை வாழவிடுங்க என்று பேசி உள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பத்திரிகையாளர்களை சந்தித்த படத்தின் இயக்குனர் ரங்கராஜ் ஸ்ருதி திறமையான நடிகை. அவர் ஏதோ தெரியாமல் செய்துவிட்டார்.. அதற்காக அவரை காலி செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது. யாருதான் வாழ்க்கையில் தப்பு செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுடைய அவப்பெயர் மாற வேண்டும். உலகத்தில் தப்பு செய்யாத மனிதரே கிடையாது. அவர்களை வாழ விடுங்க வாழட்டும்” என்று பேசியிருக்கிறார்.