வெறும் 20 ரூபாய் முதலீட்டில் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!

By Nanthini on ஆனி 12, 2025

Spread the love

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைகின்றனர். நாட்டு மக்களை உடல் ஆரோக்கியத்துடன் உயர்ந்த நிலையில் வைத்திருப்பது தான் அரசின் நோக்கம் என்பதற்காக மக்களுக்கு பலவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டமானது 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீட்டு தொகையை வழங்குகின்றது. வெறும் ₹20 என்ற பெயரளவு வருடாந்திர பிரீமியத்தில் நீங்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் பெறலாம். இந்த திட்டத்தில் சேருவதை எளிமையானது மற்றும் அணுகக் கூடியதாகும். 18 முதல் 70 வயதிற்கு உட்பட்ட எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

   

இந்தத் திட்டம் முதன்மையாக குறைந்த வருமானம் கொண்ட தனிநபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விபத்துகளால் ஏற்படும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு PMSBY காப்பீடு வழங்குகிறது..வருடாந்திர பிரீமியம் மிகவும் மலிவு விலையில் ₹20 ஆகும்.இந்தத் திட்டம் ஒரு வருட காப்பீட்டை வழங்குகிறது, ஆண்டுதோறும் பாலிசி ஜூன் 1 முதல் அடுத்த ஆண்டு மே 31 வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ. 20 பிரீமியம் செலுத்த வேண்டும்.மேலும் பிரீமியம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பற்று வைக்கப்படும், இதனை வங்கி மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.