தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படம் தான் குட் பேட் அக்லி. ஆனால் இந்த படமும் தயாரிப்பாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அஜித்தை வைத்து மீண்டும் ஆதி ரவிச்சந்திரன் தான் படமெடுக்கப் போகிறார் என்றும் ஆனால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்காதே என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தை வைத்து ஐசரி கணேஷ் படம் தயாரிக்க போவதாக கூறப்படுகிறது. ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க உள்ள படத்தின் பூஜைகள் விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக புதிய ஹீரோயின் தேடலில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகின்றார் என்றும் அவருடைய சாய்ஸ் கேஜிஎப் மற்றும் ஹிட் 3 படங்களில் நடித்த ஸ்ரீநிதி செட்டி தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரொமான்ஸ் காட்சிகளிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் மெச்சூர் ஆன காட்சிகளிலும் சிறப்பாக நடித்து வரும் ஸ்ரீநிதி செட்டி அஜித்துக்கு செம்ம ஜோடியாகவே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி மாதத்திற்குள் அஜித் நடிக்கக்கூடிய பகுதிகள் முடித்து விடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
