ஸ்ட்ராபெரி நிலவு என்று அழைக்கப்படும் அரிய வானியல் நிகழ்வு இன்று நடைபெற இருக்கிறது. இதுபோன்று இன்னும் 2043ஆம் வருடம் தான் தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி நிலவு என்பது ஒவ்வொரு ஆண்டும் தோன்றும் 6வது முழு நிலவு ஆகும். வட அமெரிக்க பகுதியில் காட்டு ஸ்ட்ராபெரி பருவத்தின் தொடக்கத்தின் அடையாளமாக பூர்வீக அமெரிக்க பழங்குடியினர் இந்தப் பெயரை வைத்துள்ளார்கள் .
இருப்பினும், இந்த சந்திர நிகழ்வு அதன் பெயர் குறிப்பிடுவது போல இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்காது, மாறாக மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பூமியின் வளிமண்டலம் சந்திரனை அடையும் ஒளியைச் சிதறடிப்பதன் விளைவால் இதன் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. இந்த ஆண்டு ஸ்ட்ராபெரி நிலவு வழக்கமான ஆண்டுகளிலிருந்து வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் முழு நிலவின் நிலை, குறிப்பாக தெற்கு வானத்தில் மிகவும் குறைவாக இருக்கும், எனவே சந்திரன் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும்.
