சூர்யா-47 படத்தில் இணையும் மலையாள இயக்குநர்..? வெளியான புதிய அப்டேட்..!!

By Soundarya on ஆனி 11, 2025

Spread the love

கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் கங்குவா திரைப்படம் சொதப்பலாக அமைந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள  படங்களை அவர் அதிகமாக எதிர்பார்த்து உள்ளார். இந்த படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை.

அடுத்ததாக ஆர்கே பாலாஜி இயக்கத்தின் சூர்யா 45 படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படபிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, அடுத்து சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது 46 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சூர்யாவின் 47வது படத்தை இயக்க ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரைக்கதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு விரைவில் வெளியாக உள்ளது.