இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டம்.. அன்று ரூ.1 லட்சம், இன்று ரூ.80 கோடி.. அனைவரையும் வியக்கவைக்கும் செய்தி..!

By Nanthini on ஆனி 9, 2025

Spread the love

பொதுவாகவே பணக்காரராக சிறந்த வழியாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும்படி பல நிபுணர்கள் தொடர்ந்து கூறுவது உண்டு. ஆனால் சிலர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் எடுக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது எதர்ச்சியாக ஒருவருக்கு அவர் தந்தை 1990 ஆம் ஆண்டு வாங்கிய பங்குகள் கிடைத்துள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய பங்குகளின் தற்போதைய மதிப்பு 80 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இது தொடர்பான செய்தியை அந்த நபர் இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் வியந்து போய் உள்ளனர்.

இது தொடர்பான பதிவில், முதலீட்டாளர் சவுரவ் தத்தா, “தனது தந்தையிடமிருந்து JSW ஸ்டீல் பங்குகளைப் பெற்ற ஒரு Reddit பயனரின் கதையை விவரித்தார். தந்தை ஆரம்பத்தில் இந்தப் பங்குகளை 1990 இல் ரூ. 1 லட்சத்திற்கு வாங்கினார். இன்று, அந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ. 80 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது 30 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்கும் உரிமையை விற்கும் சக்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.