நம்முடைய அன்றாட வாழ்வில் தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உணவின் நிறைவை மட்டும் கொடுக்காமல் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கிறது. அதாவது மருத்துவ ஆய்வின்படி வாழைப்பழத்தில் பிளனாய்டுகள், பீனாலிக் அமிலம் போன்ற உயிரியல் பண்புகளை ஊக்கிவிக்கும் சேர்மங்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால் நம்முடைய உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் அதிக அளவில் கிடைக்கிறது. இதில் சேர்மங்கள் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் பண்புகளை கொண்டிருப்பதால் உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. இதிலிருக்கும் பொட்டாசியம் இதயத்தை பலப்படுத்தும் சிறந்த பண்புகளை கொண்டுள்ளது.

இது வாழைப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கக்கூடிய முக்கியமாக இந்த தாது உதவுகிறது. இதனால் இதயம் அதிகமாக வேலை செய்வது குறைந்து, இதயம் படபடப்பு இல்லாமல் அமைதியாக இருக்கும் போது அதை உற்சாக உணர்வோடு எதையும் எதிர்கொள்ள தேவையான ஆற்றலை பெற முடியும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுது வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

வாழைப்பழத்தில் இருக்கும் தாதுக்களும், வைட்டமின்களும் நிகோடின் வேண்டும் என்ற எண்ணத்தை நம்மை விட்டு விலக செய்கிறது. இதனால் புகைப்பழக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது. இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளது. எனவே இது உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் உதவுகிறது. ரத்த சிவப்பணுக்கள் நிறைந்த ஆக்ஸிஜன் ஓட்டத்தை ஏற்படுத்தும். இதனால் உற்சாகமாகவும் அடுத்து வரும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் இதில் இருக்கிறது.
