இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம். அதாவது நாளுக்கு நாள் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த செயலியின் மூலமாக இளம் தலைமுறைதான் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சிறந்த ஒரு களத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது என்றால் மிக ஆகாது.
சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பல பல புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் instagram-ல் இனி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 3:4 ரேஷியோவிலும் பதிவேற்றம் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் இனிமேல் புகைப்படங்களை கிராப் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 ஆகிய வடிவங்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
