கர்நாடக மாநிலம் கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் கஜேந்திரா மற்றும் சைத்ரா தம்பதியினர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சைத்ராவுக்கு புனித் என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்களுடைய கள்ளக்காதலை சைத்ராவின் கணவர் கஜேந்திரா கண்டுபிடித்துள்ளார். பிறகு ஊர் பிரச்சனை மூலமாக இந்த கள்ளக்காதல் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. பிறகு சிறிது காலம் நன்றாக இருந்த சைத்ரா மீண்டும் சிவா என்ற வேறொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இதனை எப்படியோ கண்டுபிடித்த கணவர் மற்றும் மாமியாரை எப்படியாவது தீர்த்து கட்ட வேண்டும் என்று சைத்ரா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் சாப்பிடும் உணவில் விஷம் வைத்து கொல்ல முயன்றுள்ளார். ஆனால் இதனை எப்படியோ கண்டுபிடித்த கணவரும் மாமியாரும் அதனை சாப்பிடவில்லை. அதன் பிறகு இருவரும் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
