உலகில் எத்தனையோ இடங்களில் வேலைகள் இருந்தாலும் அந்தந்த வேலைக்கு ஏற்றது போல தான் சம்பளமும் வழங்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலரும் வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியே வேலை கிடைத்தாலும் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை கிடைக்கிறது. இப்படி இருக்கையில் ஒரு சின்ன வேலைக்காக எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் பலருக்கும் இது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

அதாவது பிரிட்டனின் கொலம்பியா கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய தீவில் கலங்கரை விளக்க காப்பாளர் பணிக்கு ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. கலங்கரை விளக்கத்தை மூழ்கடிக்கும் அளவுக்கு அலைகள் எழும் என்பதாலும், சக்தி வாய்ந்த புயல்கள் தாக்கும் என்பதாலும் இந்த பணிக்கு வர பலரும் தயங்குகிறார்கள். இந்த பணிக்கு ஆண்டுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக வெளியாகி உள்ள செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
