அப்பப்பா நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துபோய்… சின்மயி வெர்ஷன் “முத்தமழை” பாடல் குறித்து பதிவிட்ட செல்வராகவன்..!!

By Soundarya on ஆனி 8, 2025

Spread the love

மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு நடித்திருக்கும் படம் தக் லைப்.   படத்தில் திரிஷா, ஜோஜூ  ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல்  ஃபிலிம்ஸ் மற்றும்ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த ஆறாம் தேதி இந்த படம் வெளியானது. படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்தமழை பாடல் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில் அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் அந்த பாடலை மேடையில் சின்மயி பாடினார். இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து தக் லைப்  ஆல்பத்தில் பத்தாவது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது.   இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் இந்த பாடலை கேட்டு தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது ஒரு பாடல் கேட்டு நாடு நரம்பெல்லாம் சிலிர்த்து போய் உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது போல் முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதரால் நம் ஏ ஆர் ரகுமான் அவர்களால் மட்டுமே முடியும்” என்று கூறியுள்ளார்.