இன்று கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்த தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய பாடல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது. அதேசமயம் சின்மயின் பழைய கதையைப் பற்றியும் தற்போது பேசப்பட்டு வருகின்றது. சின்மயி தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். அவருடைய பாடல்களுக்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இருந்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பாடகி சின்மயின் பாடல் எந்த திரைப்படத்திலும் இடம்பெறவில்லை.

இதனால் சின்மயி பாடுவதற்கு எதற்காக தடை விதிக்கப்பட்டது என்ற கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சின்மயி விளக்கமளித்துள்ளார். அதில், நான் கிட்டத்தட்ட 70 திரைப்படங்களுக்கு மேல் டப்பிங் பேசியுள்ளேன். அதற்காக டப்பிங் யூனியனுக்கும் நான் பணம் செலுத்தியுள்ளேன். ஆனாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நான் செய்த பாலியல் குற்றச்சாட்டு காரணமாக என் மீது பழிவாங்கும் நடவடிக்கை தான் இந்த தடை உத்தரவு என்று நான் சொல்வேன். என்னை தடை செய்ததற்கு அவங்க சொன்ன காரணம் 120 ரூபாய் சப்ஸ்கிரைப்சன் கட்டவில்லை என்றுதான் சொன்னாங்க. யூனியன் விதிமுறைப்படி நான் ஐந்தாயிரம் ரூபாய் கட்டினால் நானும் அதில் உறுப்பினர் தான்.

ஐந்தாயிரம் ரூபாய்க்கு குறைவான அமௌன்ட் தான் அப்போ இருந்தது. ஆனா நான் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் டப்பிங் பேசும்போது எனக்கு வந்த 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அப்படியே டப்பிங் யூனியன் சேர்வதற்காக எடுத்துக்கிட்டாங்க. அதற்கான ரசீதை அவங்க நீதிமன்றத்தில் ஒப்படைச்சாங்க. இன்னைக்கு இருக்க டப்பிங் யூனியல்ல ஒவ்வொருத்தர பொருத்து ஒவ்வொரு அமௌன்ட் வாங்கிட்டு இருக்காங்க. அது மூன்று லட்சம் வரை செல்கிறது. டப்பிங் பேசுபவர்களுக்கு சம்பளத்திலிருந்து பத்து சதவீதத்திற்கு மேலே டப்பிங் யூனியன் பணம் வாங்குகிறது. அந்த பணம் எங்கே போனது என யாருக்கும் தெரியாது என்று சின்மயி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
